ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மைத்ரேய முகூர்த்த தேதிகள் 2024 (July, August, September, October, November, December Mythra Muhurtham 2024)
இந்த காலத்தில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தொழில் மாற்றும் வியாபாரம் செய்பவர்கள் தொழில் தொடங்க அல்லது தொழில் விரிவாக்கத்துக்கு கடன் வாங்காமல் இருப்பதில்லை. சிலருக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் போதிய வருமானம் வந்து கடனை சுலபமாக அடைத்துவிடுவார். ஆனால் சிலருக்கு வியாபாரம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்றால் கடன் தவணை செலுத்தாமல் மேலும் மேலும் கடன் வாங்கும் சூழல் ஏற்படுகிறது. இதே போல் மத சம்பளம் வாங்குபவர்களும் லோனில் பைக், லோனில் வீடு கட்டுதல் என்று சிலசமயம் தகுதிக்கு மீறி கடன் வாங்கி கட்ட முடியாமல் அவஸ்தை படுகின்றனர்.
இவ்வாறு கடன் சுமையால் அவதி படுபவர்களுக்கு நமது முன்னோர்கள் கூறியது தான் மைத்ரேய முஹூர்த்தம். மைத்ரேய மிகுத்த தேதிகள் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை வரும். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வரும் மைத்ரேய முகூர்த்த தேதிகள் இந்த பகுதியில் குறிக்கப் பட்டுள்ளன.
மைத்ரேய முகூர்த்தத்தில் என்ன செய்ய வேண்டும்?
முதலில் உங்கள் கடன்கள் என்னவென்று வரிசையாக ஒரு பேப்பரில் எழுதிக்கொள்ளவும். பின்பு ஒவ்வொரு கடனுக்கும் 3 கூட்டுத்தொகை வருமாறு ஒரு அமௌண்ட் குறிக்கவும். உதாரணமாக 3, 12, 21 , 102 , 111 என்று தொகை எழுதவும். ஒவ்வொரு கடனுக்கும் ஒரு கவர் வாங்கி முதலிலேயே வைக்கவும். மைத்ரேய முகூர்த்த நேரத்தில், கவரின் மேல் கடனின் பெயரை எழுதவும். கவரின் நன்கு முனைகளிலும் மஞ்சள், ஜவ்வாது, பச்சை கற்பூரம் கலந்து தடவவும். பின்பு நீங்கள் எழுதிவைத்த தொகையை அந்தந்த கவரில் போடவும். முக்கியமாக ஒவ்வொரு கவரிலும் நாணயங்கள் கண்டிப்பாக இருக்குமாறு தொகையை அதில் போடவும். இதை பூஜை அறையில் வைக்கவும். பின்பு அந்த தொகையுடன் நீங்கள் கட்டவேண்டிய தவணை தொகை சேர்த்து கடனுக்கு கட்டவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் விரைவில் கடன் அடையும்.
இதுவே நீங்கள் ஆன்லைனில் கடன் கட்டுபவர்கள் முழுத்தொகையோ அல்லது பத்தி தொகையோ மூன்று கூட்டுத்தொகை வருமாறு இந்த மைத்ரேய முகூர்த்தத்தில் கடனை கட்ட, விரைவில் கடன் அடையும்.
2024 ஜூலை மாத மைத்ரேய முகூர்த்த தேதிகள்
தேதி | ஜூலை மாத மைத்ரேய முகூர்த்த நேரம் |
---|---|
01.07.2024 | அதிகாலை 12.55 AM முதல் 2.35 AM வரை கிழமை: திங்கட்கிழமை | திதி: தசமி | கரணம்: விஷ்டி கரணம் |
17.07.2024 | மதியம் 2.15 PM முதல் 4.22 PM வரை கிழமை: புதன்கிழமை | திதி: ஏகாதசி | கரணம்: விஷ்டி கரணம் |
27.07.2024 | இரவு 11.15 PM முதல் 28.07.2025 12.50 AM வரை கிழமை: சனிக்கிழமை | திதி: அஷ்டமி | கரணம்: பாலவ கரணம் |
2024 ஆகஸ்ட் மாத மைத்ரேய முகூர்த்த தேதிகள்
தேதி | ஆகஸ்ட் மாத மைத்ரேய முகூர்த்த நேரம் |
---|---|
13.08.2024 | மதியம் 12.25 PM முதல் 2.35 PM வரை கிழமை: செவ்வாய்க்கிழமை | திதி: நவமி | கரணம்: பாலவ கரணம் |
23.08.2024 | இரவு 09.20 PM முதல் 11.05 PM வரை கிழமை: வெள்ளிக்கிழமை | திதி: பஞ்சமி | கரணம்: தைத்துளை கரணம் |
2024 செப்டம்பர் மாத மைத்ரேய முகூர்த்த தேதிகள்
தேதி | செப்டம்பர் மாத மைத்ரேய முகூர்த்த நேரம் |
---|---|
10.09.2024 | காலை 10.36 AM முதல் மதியம் 12.45 PM வரை கிழமை: செவ்வாய்க்கிழமை | திதி: சப்தமி | கரணம்: வனிசை கரணம் |
20.09.2024 | இரவு 07.30 PM முதல் 09.15 PM வரை கிழமை: வெள்ளிக்கிழமை | திதி: திருதியை | கரணம்: விஷ்டி கரணம் |
2024 அக்டோபர் மாத மைத்ரேய முகூர்த்த தேதிகள்
தேதி | அக்டோபர் மாத மைத்ரேய முகூர்த்த நேரம் |
---|---|
07.10.2024 | காலை 8.50 AM முதல் 11 AM வரை கிழமை: திங்கட்கிழமை | திதி: பஞ்சமி | கரணம்: பவ கரணம் |
17.10.2024 | மாலை 05.44 PM முதல் 07.30 PM வரை கிழமை: வெள்ளிக்கிழமை | திதி: பிரதமை | கரணம்: பாலவ கரணம் |