பாற்கடலில் மஹாலக்ஷ்மியுடன் தோன்றிய பொருட்களில் சங்கும் ஒன்று. எனவே சங்கு மஹாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படுகிறது. சங்கின் மேல்பகுதியில் சந்திரனும் நடுப்பகுதியில் சூரியனும் அடிப்பகுதியில் பிரம்மாவும் வசிப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது பஞ்சபூதங்களும் சங்கில் வசிப்பதால் இந்த சங்கு காயத்ரி மந்திரத்தை தினமும் ௧௦௮ முறை கூறுவதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும், தினமும் அதிர்ஷ்டத்தை உணர்வீர்கள், செல்வமும் படிப்படியாக பெருகும்.
” பாஞ்சஜன்யாய வித்மஹே
பத்ம கர்பாய தீமஹி
தந்நோ ஷங்க ப்ரசோதயாத் “” Panchajanyaya Vidmahe
Padma Garbhaya Dheemahi
Tanno Shankha Prachodayaath”
மேலும் மஹாவிஷ்ணுவின் கைகளை அலங்கரிக்கும் இந்த சங்கை தினமும் வழிபடுவதன் மூலம் தீய சக்திகளை அண்டவிடாமல் தடுக்கலாம் மற்றும் எதிர்பாராத ஆபத்துக்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.