ஜோதிட சாஸ்திரத்தில், அஷ்டவர்கம் என்பது ஒரு கிரகம் ஒரு ராசிக்கு தரும் எட்டு விதமான பலன்களை குறிக்கும். “அஷ்டம்” என்றால் “எட்டு” எனப் பொருள்படும். “அஷ்டகவர்கம்” என்றால் எட்டு விதமான பலன்களின் வர்கமாகும்.
ஒரு கிரகம், ஒரு ராசிக்கு தரும் எட்டு வர்கங்கள் பின்வருமாறு:
- சுப வர்கம்: ஒரு கிரகம் ஒரு ராசியில் அமர்ந்து, அதன் ராசிக்கு சுபமான இடத்தில் அமர்ந்தால், அதற்கு அந்த ராசியுடன் சுப வர்கம் ஏற்படும். இது நற்பலன்களை தரும்.
- அசுப வர்கம்: ஒரு கிரகம் ஒரு ராசியில் அமர்ந்து, அதன் ராசிக்கு அசுபமான இடத்தில் அமர்ந்தால், அதற்கு அந்த ராசியுடன் அசுப வர்கம் ஏற்படும். இது தீய பலன்களை தரும்.
- சாதாரண வர்கம்: ஒரு கிரகம் ஒரு ராசியில் அமர்ந்து, அதன் ராசிக்கு நடுநிலையான இடத்தில் அமர்ந்தால், அதற்கு அந்த ராசியுடன் சாதாரண வர்கம் ஏற்படும். இது நற்பலன்களையும் தீய பலன்களையும் தரும்.
- அந்தர் வர்கம்: ஒரு கிரகம் ஒரு ராசியில் அமர்ந்து, அதன் ராசிக்கு நேர் எதிர் ராசியுடன் அந்தர் வர்கம் ஏற்படும். இது தீய பலன்களை தரும்.
- அதி வர்கம்: ஒரு கிரகம் ஒரு ராசியில் அமர்ந்து, அது அந்த கிரகத்தின் உச்ச ராசியாக இருந்தால் அதி வர்கம் ஏற்படும். இது மிகச் சிறந்த பலன்களை தரும்.
- அதிபத்யம்: ஒரு கிரகம் ஒரு ராசியில் அமர்ந்து, அதன் ராசியை ஆட்சி செய்வதாக இருந்தால், அதற்கு அந்த ராசியுடன் அதிபத்யம் ஏற்படும். இது நற்பலன்களை தரும்.
- சுபர்ஷ்டம்: ஒரு கிரகம் ஒரு ராசியில் அமர்ந்து, அதன் ராசிக்கு மிகவும் சுபமான இடத்தில் அமர்ந்தால், அதற்கு அந்த ராசியுடன் சுபர்ஷ்டம் ஏற்படும். இது மிகச் சிறந்த பலன்களை தரும்.
SHOP ON AMAZON
அஷ்டவர்க பலன்கள் ஒருவரின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கும். அவை உடல் ஆரோக்கியம், பணம், கல்வி, திருமணம், தொழில், குடும்பம், சமூக அந்தஸ்து போன்றவற்றை பாதிக்கும்.
பொதுவாக கிரகங்கள், ஒரு சில ராசிகளில் சஞ்சரிக்கும்போது நற்பலன்களையும், ஒரு சில ராசிகளில் சஞ்சரிக்கும்போது தீயபலன்களையும் தருகிறது.
அஷ்டவர்கத்தை பயன்படுத்தி உங்கள் ஜாதகத்தின் கிரகங்களின் பலத்தை அறியலாம். ஜாதகத்தில் பன்னிரண்டு ராசிகள் உள்ளன, ஒவ்வொரு ராசிக்கும் லக்கினம் மற்றும் ஏழு கிரகங்களின் பார்வை மற்றும் சேர்க்கை ஆகியவற்றின் அடிப்படையில் சில புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டவணையில் ராகு கேது இடம்பெறாது. ஒவ்வொரு கிரகமும் அதிகபட்சமாக எட்டு புள்ளிகளைத்தரும். எனவே ஒவ்வொரு ராசியும் அதிகபட்சமாக 56 புள்ளிகள் பெரும். ஆனால் மொத்தமாக ஒரு ஜாதகத்திற்கு 337 புள்ளிகள்(பரல்கள்) தான். உதாரணத்திற்கு, ஒரு ராசியில் 40 புள்ளிகள் இருந்தால் இன்னொரு ராசியில் 18 புள்ளிகள் தான் இருக்கும். அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் மொத்தம் 337 புள்ளிகள் தான். அதனால் தான்
பிறப்பு சாதகத்தில் ராகு, கேதுக்கள் நீங்கலாக மற்ற ஏழு கிரகங்கள் மற்றும் லக்னம் அமைந்த ராசி இவைகளை மையப்படுத்தி கூறப்படுவதால் இதற்கு “அஷ்டகவர்கம்” என்று பெயர். அஷ்டகவர்கத்தில் ராகு, கேதுக்களுக்கு இடமில்லை.
அஷ்டகவர்க முறையில் ஒரு கிரகம் ஒரு ராசிக்கு எட்டு வர்க பலன்களைத்தரும். அதில் சுப வர்கம், அசுப வர்கம் இரண்டும் கலந்திருக்கும். சுப வர்கத்தை அனுகூல பிந்துக்கள் என்றும், அசுப வர்கத்தை பிரதிகூல ரேகைகள் என்றும் குறிப்பிடுவது வழக்கம். ஒரு கிரகம், ஒரு ராசிக்கு எட்டு வர்க பலன்களைத்தரும் என்பதால் ஏழு கிரகங்களும் சேர்ந்து ஒரு ராசிக்கு (7*8=56) 56 வர்க பலன்களைத் தரும். எனவே அதிக பட்சமாக ஒரு ராசிக்கு 56 வர்க பலன்கள் கிடைக்கும். ஒரு கிரகம் ஒரு ராசிக்கு எட்டு வர்க பலன்கள் வீதம் பன்னிரண்டு ராசிகளுக்கு (8*12=96) 96 வர்க பலன்களைத்தரும். ஏழு கிரகங்களும் சேர்ந்து பன்னிரண்டு ராசிகளுக்கு (7*8*12=672) 672 வர்க பலன்களைத் தருகின்றன. இந்த 672 வர்க பலன்களில் 337 வர்க பலன்கள் சுபத்தன்மையுடையவையாகும். மீதமுள்ள 335 வர்க பலன்கள் அசுபத்தன்மையுடையவையாகும்.
அஷ்டகவர்க முறையில் ஒரு வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டின் நற்பலன்கள் கிடைக்காது. 28 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்கு நன்மையான பலன்கள் உண்டாகும். முப்பதுக்கும் மேல் பரல்கள் இருந்தால் இன்னும் சிறப்பு. இதனால்தான் ஒரு கிரகம் ஆட்சி உச்சமாக இருந்தாலும் அதன் தசா புக்தியில் நல்ல பலன்கள் கிடைப்பதில்லை. அதே சமயம் 6, 8, 12போன்ற மறைவு ஸ்தானங்களில் உள்ள கிரகங்கள் அஷ்டவர்கத்தில் நல்ல பரல்கள் பெற்றிருந்தால் அதன் தசா புக்தியில் நல்ல பலன்கள் தரும்.
லக்கினத்தில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் ஜாதகன் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். இரண்டாம் வீட்டில் குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். வரவிற்கு மேல் செலவாகும், கையில் காசு தங்காது. மூன்றாம் வீட்டில் அதிக பரல்கள் இருந்தால் இவருக்கு குரல்வளம், கற்பனை திறன் நன்றாக இருக்கும். நான்காம் வீட்டில் குறைவான பரல்கள் இருந்தால் தாய்ப்பாசம் இவருக்கு கிடைக்காது. வண்டி வாகனம் சொந்த வீடு போன்றவை எளிதில் கிட்டாது. ஐந்தாம் வீட்டில் அதிக பரல்கள் இருப்பவருக்கு நல்ல பண்புள்ள குழந்தைகள் அமையும், குழந்தைகள் மூலம் சகல வசதிகளும் கிட்டும்.
ஆறாம் வீட்டில் அதிக பரல்கள் இருந்தால், வாழ்க்கையில், நோய், கடன், எதிரி, ஆகிய பிரச்சினைகள் இல்லாமல் இருக்கலாம். ஏழாம் வீட்டில் குறைவான பரல்கள் இருந்தால் உரிய வயதில் திருமணம் ஆகாது. தாமதமாகத் திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது. எட்டாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருந்தால் ஆயுள் பலம் இருக்கும். ஜோதிடத்தில் நல்ல ஆர்வம் இருக்கும். ஒன்பதாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருந்தால் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். பத்தாம் வீட்டில் திகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அல்லது நல்ல தொழில் அமையும். தலைமை தாங்கும் பொறுப்பு கிடைக்கும். சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால் எடுத்தவுடன் நல்ல வேலை அமைவது சிரமம். கிடைக்கின்ற வேலையில் மனதைத் தேற்றிக் கொண்டு பணியாற்ற வேண்டியதுதான்.
பதினொன்றில் அதிக பரல்கள் இருந்தால் நல்ல செல்வந்தராக இருப்பர். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பன்னிரெண்டில் அதிக பரல்கள் இருப்பவர்களுக்கு நல்ல கற்பனைதிறன் இருக்கும், அமானுஷ்ய விஷயங்களில் அதீத ஈடுபாடு இருக்கும். நல்ல தூக்கம் உண்டு. 25 க்கும் குறைவான பரல்கள் இருந்தால் மது அல்லது போதை பழக்கத்திற்கு எளிதில் அடிமையாகிவிடுவார்.
ஒரு கிரகம் அது இருக்கும் வீட்டில் 5 அல்லது 5 க்கும் மேல் பரல் பெற்று இருந்தால் அதன் தசை புக்தியில் நன்மை தரும். 5 க்கும் குறைவான பரல் பெற்றால் அதன் தசை புக்தியில் நன்மை தராது. 3 க்கும் குறைவான பரல் இருந்தால் மிகவும் மோசமான பலன்கள் தரும்.
எல்லாருக்கும் மொத்தம் 337 பரல்கள் தான், ஒரு இடத்தில் அதிக பரல்கள் இருந்தால் அது இன்னொரு இடத்தில் குறைந்துவிடும். ஒருவர் பெரிய செல்வந்தராக இருப்பார் கோடிக்கணக்கில் சொத்து இருக்கும் ஆனால் அவருக்கு குடும்ப வாரிசு இருக்காது, காரணம் ஐந்தாம் பாவத்தில் மிக குறைவான பரல்கள் இருந்திருக்கும். அல்லது அவருக்கு ஆறாம் பாவ பலன்கள் குறைந்து, தீர்க்க முடியாத வியாதிகள் இருக்கும்.
ஒருவர் ஒருவேளை கஞ்சிக்கே கஷ்டப்படுவார் ஆனால் அவருக்கு நான்கைந்து குழந்தைகள் இருக்கும். இந்த இருவருக்குமே வாழ்கை சிரமமானதுதான்.
வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. எல்லா வீட்டிலும் அளவான பரல்கள் இருந்தால் வாழ்க்கையில் சகல பாக்கியங்களும் அளவோடு கிட்டும். நல்ல குடும்பம், நல்ல மனைவி அல்லது கணவன், நல்ல குழந்தைகள், படிப்பு, நல்ல ஆரோக்கியம் என நமக்கு எல்லாமே தான் வேண்டும். எனவே, அதிக பரல்களுக்கு ஆசைப்படாதீர்கள்.