உங்கள் மனதைத்துளைத்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று யாரவது சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? இது போன்றதொரு தருணத்தில் நீங்கள் இருந்திருக்கிறீர்களா?

சிலருக்கு ஒருவரை பார்த்தவுடனே அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்று அறியும் திறமை இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு பிறப்பிலேயே இப்படியொரு அபூர்வ சக்தி இருக்கும். ஏமாற்றுவதில் கில்லாடிகளால் கூட இந்த ராசிக்காரர்களை ஏமாற்ற முடியாது. காரணம் உங்கள் எண்ணம் மற்றும் உணர்வுகள் என்ன என்பதை உங்களை பார்த்ததுமே அவர்கள் புரிந்துக்கொண்டிருப்பார்கள்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று ராசிக்காரர்கள் ‘மனதைப் படிக்கும்’ உள்ளுணர்வு திறனைக் கொண்டிருக்கிறார்கள். யார் அந்த ராசிக்காரர்கள், எதனால் இந்த மனதைப்படிக்கும் திறமை இவர்களுக்கு மட்டும் உள்ளது என்று பார்ப்போம்.

எந்த ராசிக்காரர்கள் உங்கள் மனதைப்படிக்கும் திறன் கொண்டவர்கள்?

மனதைப் படிக்கக்கூடிய நுண்ணறிவுமிக்க மூன்று ராசி அறிகுறிகளை ஆராய்வோம்

மீன ராசி

மனதை படிக்கும் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராசி, இரட்டை மீன்கள் கொண்ட மீன ராசிதான். இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். ஆபத்தை உடனே உணர்பவர்கள். மீன ராசியினர் பெரும்பாலும் தங்கள் உணர்ச்சிகளுடனும் மற்றவர்களின் உணர்ச்சிகளுடனும் ஆழமாக இணக்கமாக இருப்பார்கள். ஆன்மீகமும் மனோதத்துவமும் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். இவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரின் ஆழ்மனதையும் படித்துவிடுவார்கள்.

meena rasi pisces மீன ராசி

ஆம், மீன ராசிக்காரர்களால் உங்கள் மனதை படிக்க முடியும், ஏனென்றால் நீங்கள் அவர்களை சந்திக்கும் போது அவர்கள் உங்கள் ஆன்மாவை ஆழமாகப் பார்க்கிறார்கள். பார்த்தவுடனே நீங்கள் எப்படிபட்டவர் என்று அவர்களுக்கு தெரிந்துவிடும். முதல் பார்வையிலேயே நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துவிட்டால் பின்னர் அந்த எண்ணத்தை அவர்கள் மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள்.

கடகராசி

மற்றவர்களின் மனதை எளிதில் படிக்கக்கூடிய ராசிகளில் கடக ராசியும் ஒன்று. மனோகாரகன் சந்திரனின் ராசி என்பதால் இயற்கையிலேயே பிறர் மனதை மற்றும் மனநிலையை படிக்கும் திறன் இவர்களுக்கு உண்டு. யாரேனும் மனக்கவலையுடன் இருந்தால் அதை முதலில் கண்டுபிடிப்பது கடக ராசிக்காரர்கள் தான். வாடிய முகத்துடன் ஒருவரை பார்க்க நேர்ந்தால் இவர்களால் சும்மா இருக்க முடியாது, உடனே அவர்களிடம் சென்று என்ன பிரச்னை அதை தீர்க்க தன்னால் எப்படி உதவமுடியும் என்று செயலில் இறங்கிவிடுவார்கள்.

cancer zodiac கடகராசி

தாய்மை உள்ளம் கொண்ட கடக ராசியினர் தாங்கள் சந்திக்கும் நபரின் மனஉளைச்சலை புரிந்துக்கொண்டு உதவ முயற்சிப்பர். மற்றவர்களின் தேவைகளைக் கவனித்து அவர்களை பாதுகாப்பாகவும் வசதியாகவும் உணர வைப்பதில் கடக ராசிக்கு நிகர் வேறுயாரும் இல்லை. இவர்களிடம் உங்களின் உணர்ச்சிகளை நீங்களே முயன்றாலும் மறைக்கவே முடியாது.

விருச்சிக ராசி

விருச்சிக ராசியினரால் ஒருவரை பார்த்தவுடன் அவர்களின் உடலசைவுகளை வைத்து அவர்களின் எண்ணத்தை புரிந்துகொள்வார்கள்.

விருச்சிக ராசி scorpio

உடல்மொழி மற்றும் உங்கள் நடவடிக்கைகளை புரிந்துக்கொண்டு உங்களிடம் எப்படி காரியத்தை சாதிக்கவேண்டும் என்று திட்டமிடுவார்கள். இந்த திறமையால் இவர்கள் வணிகம் வியாபாரம் போன்றவற்றில் திறமையுடன் செயல்படுவார்கள். மற்றவர்களின் தேவையறிந்து செயல்படுவதால் மார்கெட்டிங்கி துறையில் சிறந்து விளங்கும் இவர்களிடம் நீங்கள் சுலபமாக மயங்கிவிடுவீர்கள்.