திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்படும் முக்கிய நிகழ்வு. ஒருவகையில் அது தவிர்க்கக்கூடாத ஒன்று. விரைவாகத் திருமணம் நடக்க வேண்டுமென்பதே திருமணமாகும் வயதை எட்டியவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் கனவாக இருக்கும். இதற்கும் அவரவர் ஜாதகப்படி அமைந்துள்ள கிரக அமைப்பே காரணம். திருமணம் பற்றிய கேள்விக்கு விடையறிய வேண்டுமானால் முதலில் ஆராய வேண்டியது ஏழாம் பாவமே. திருமண பாக்கியத்தை ஒருவருக்கு அளிப்பதில் சுக்கிரன், குரு பகவானின் அருளும் அவசியம். குரு பகவான் சேர்க்கை, பார்வை ஏழாமிடம் மற்றும் இரண்டாமிடத்தின் அதிபதிகளுக்கு இருக்குமானால் அவர்களுக்குத் திருமணம் அதிக சிரமமில்லாமலே நடைபெறும் என்று கூறலாம்.
திருமணம் எப்பொழுது நடக்கும்?
1) குரு கோச்சார ரீதியாக ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 5, 7 , 9 ஆகிய இடங்களுக்கு வரும் காலத்தில் திருமணம் கூடி வரும்.
2) கோச்சாரத்தில் லக்கினத்திற்கு குரு 2, 5, 9, 7, 11 ஆகிய இடங்களுக்கு குரு வரும்போது திருமண வாய்ப்பு உண்டு.
3) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்க்கு கோச்சார குரு வரும் காலம் திருமணம் நடக்கும்.
4) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டை குரு கோச்சார ரீதியாக பார்க்கும் காலத்திலும் திருமணம் வாய்ப்பு உண்டு.
5) லக்கினாதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும் திருமணம் கூடி வரும்.
6) 7ம் அதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும் திருமணம் கூடி வரும்.
7) ராகு/கேது கோச்சார ரீதியாக ஜாதகத்தில் லக்கினம், ராசி, நவாம்ச லக்கினம், சுக்கிரன் இருக்கும் ராசி ஆகிய இடங்களுக்கு வரும் காலத்திலும் திருமணம் கூடி வரும்.
8) சனி தசை அல்லது புத்தி காலத்திலும் திருமணம் வாய்ப்பு உண்டு.
9) ஏழரைச் சனி காலத்திலும் திருமணம் வாய்ப்பு உண்டு.
10) சுக்கிரனின் தசை அல்லது புத்தி காலத்திலும் திருமணம் வாய்ப்பு உண்டு.
11) ராகு/கேதுவின் தசை அல்லது புத்தி காலத்திலும் திருமணம் வாய்ப்பு உண்டு.
12) அஷ்டவர்கத்தில் ஏழாம் வீடு பெற்ற பரல்கள், ஏழாம் அதிபதி நின்ற வீட்டு பரல்கள், குரு நின்ற வீட்டின் பரல்கள் மற்றும் சுக்கிரன் நின்ற வீட்டின் பரல்கள் எண்ணிக்கையில் வரும் வயதில் ஜாதகருக்கு திருமண வாய்ப்பு உண்டு.
13) தசா நடத்தும் கிரகத்தின் வீட்டிலோ அல்லது ஏழாம் வீட்டிலோ ஏழாம் அதிபதி இருந்தாலும் அந்த தசையில் திருமணம் நடக்கும்.
14) தசா நடத்தும் கிரகத்தின் வீட்டிலோ அல்லது ஏழாம் வீட்டிலோ சுக்கிரன் இருந்தாலும் அந்த தசையில் திருமணம் நடக்கும்.
மேற்கூறிய விதிகளை உங்கள் ஜாதகத்தில் பொருத்திப்பார்த்து நீங்களே கண்டுபிடிக்கலாம்.