பகலாமுகி தேவி, தச மஹாவித்யா கடவுளர்களில் ஒருவராகத் திகழ்பவர். அவர் நமக்கு அதீத சக்தி, நிம்மதி மற்றும் பாதுகாப்பை வழங்கும் தெய்வமாகப் போற்றப்படுகிறார். பகலாமுகி தெய்வம் எதிரிகளை அழித்து , தீய எண்ணங்கள், நோய்நொடி, விபத்து, ஏவல் பில்லி சூனியத்திலிருந்து நம்மை காப்பவர். நமக்கு நிலையான வளமான நிம்மதியான வாழ்க்கையை அருளுபவள் இந்த பக்லாமுக்ஹ்ய தேவி.
பகலாமுகி ப்ரஹ்மாஸ்திர மாலா மந்திரம்:
“ஓம் ஹ்லீம் பகலாமுகி ஸர்வ துஷ்டாநாம் வாசம் முகம் பதம் ஸ்தம்பய ஜிவ்ஹாம் கீலய புத்திம் வினாசய ஹ்லீம் ஓம் ஸ்வாஹா”
இந்த மந்திரம் பின்வரும் பலன்களை தருவதாக நம்பப்படுகிறது:
- தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு: எதிரிகள், தீய நினைவுகள், தீய உள்நோக்கங்கள், எதிர்மறை சக்திகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
- வெற்றிக்கான துணை: எதிர்ப்பாராத விபத்துக்கள் தீராத வியாதிகள், இடர்கள் மற்றும் தடைகளை அகற்றி நமது வாழ்வில் முன்னேற்றத்தை தருகிறது.
- நிதானமும் மனஉறுதியும்: சிரமமான சூழ்நிலைகளில் நிம்மதியுடன் எதிர்கொள்ள உதவுகிறது.
- வாக்கியக் கட்டுப்பாடு: பிறர் நம்மை பற்றி அவதூறு பேசுவது மற்றும் விமர்சனங்களிலிருந்து காப்பாற்ற உதவுகிறது.
- வளமையான வாழ்வு: நமது வாழ்வை வளமாக்குகிறது.
இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன் அனுபவமிக்க குருவிடம் ஆசிபெறுவது நல்லது. செவ்வாய் அல்லது வியாழன் அன்று, அதிகாலையிலோ மாலையிலோ 108 முறை ஜபிப்பது சிறந்தது.
மந்திரம் ஜபிக்கும் போது பகலாமுகி தேவியின் பொன்னிறக் கதிர்களை உங்களைச் சுற்றி பாதுகாக்கும் காட்சி உங்கள் மனதில் பாருங்கள்.
இந்த மந்திரம் மிக சக்திவாய்ந்தது, எனவே நேர்மையான எண்ணங்களுடன் ஜபிக்கப்பட வேண்டும். யாரையும் பழிவாங்க பயன்படுத்தக் கூடாது.