கோமதி சக்ரம் என்பது உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள துவாரகாபுரியில் உள்ள கோமதி ஆற்றில் காணப்படும் ஒரு வெள்ளை நிறக் கல் ஆகும். இந்த கல்லின் ஒரு பக்கத்தில் சிறிய சக்கரங்கள் போன்ற அமைப்பு இருக்கும். இது லட்சுமி தேவியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. கோமதி சக்கரம் கிருஷ்ணரின் சுதர்சன சக்கரத்தை ஒத்துஉள்ளது.
கோமதி சக்கரத்தை வைத்திருப்பவர்கள் தனம், நல்ல ஆரோக்கியம் மற்றும் செல்வ செழிப்புடன் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
துவராகவில் உள்ள கிருஷ்ணா பரமாத்மாவின் அரண்மனை முழுவதும் இந்த கோமதி சக்கரத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. வடமாநிலங்களில் விசேஷ வழிபாடுகளில் ஷாலிகிராமங்களுடன் கோமதி சக்கரங்கள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. ஷாலிகிராமத்தையும் கோமதி சக்கரத்தையும் ஒன்றாக இணைத்து வழிபடும் போது, பாவங்கள் கரைந்துவிடுமாம்.
கோமதி சக்கரத்தை வணங்குவதன் வாயிலாக அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சீபுரம், அவந்திகா எனும் உஜ்ஜையினி, துவாரகை ஆகிய முக்தி தரும் 7 தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும். ஸ்ரீகிருஷ்ணர், கோமதி சக்கரத்தின் மீது அமைந்த தர்ம சபையில் வீற்றிருந்து ஆட்சி செய்து வந்தார் என்கிறது புராணம். சொர்க்க துவாரம், மோட்ச துவாரம் என்ற இடத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த கல்லை விஷ்வகர்மா மூலமாக உருவாக்கி துவாரகை மக்களின் சங்கடங்களை தீர்க்க அருளி யிருக்கிறார்.
- அசுவினி, பரணி, கிருத்திகை – நெற்றி.
- ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை – முகப்பகுதி.
- புனர்பூசம், பூசம் – இரு தோள்கள்.
- ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம் – மார்பு பகுதி.
நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும், நமது நட்சத்திரத்திற்குரிய பாகத்தை மனதில் கொண்டு, அந்த பாகம் எதுவோ அப்பகுதியை மனதால் நினைத்தோ அல்லது தொட்டோ வணங்க வேண்டும். அதன் வாயிலாக நமது வேண்டுதல்கள் அதிசயிக்க தக்க விதத்தில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கோமதி சக்கரத்தின் சிறப்பு
- வலப்புற சுழி அமையப் பெற்ற கோமதி சக்கரத்தை அனைவரும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் வழிபாடு செய்யலாம்.
- கோமதி சக்கரமானது பூஜையில் வைக்கப்படும்போது. நிமிர்ந்த நிலையில் வைக்கப்படவேண்டும். அதிலுள்ள சுழியானது மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக சிவப்பு பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்கவேண்டும்.
- பெரியோர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது. விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது சிறப்பைத் தரும்.
- கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும்.
- கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.
- கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த நபர் கோமதி சக்கரத்துடன், வைடூரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.