தேவலோகத்தில் உள்ள பல தேவர்களில் ஒருவர் வருண பகவான். இவர் நீருக்கு அதிபதியாவார். மழை மற்றும் நீர் நிலைகளுக்கு அதிபதி. மழை வரவேண்டும் என மனமுருகி வருணபகவானை வேண்டினால் மழை பெய்யும். நீர் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் தினமும் வருண காயத்ரி மந்திரத்தை செல்லி வருண பகவானை வேண்டினால் நீர் சம்பந்தப்பட்ட பிரச்சினை தீரும். நீர் சம்பந்தமான பிரச்சினைகள் மட்டுமல்லாது , சளி , இருமல், காய்ச்சல், சிறுநீரக நோய் போன்ற நீர் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் கடன் தொல்லைகளுக்கும் வருண காயத்ரி மந்திரம் சொல்லி வருணபகவானை வேண்டினால் உங்கள் பிரச்சினைகள் தீரும்.

“Om Jala Bimbaya Vidmahe 
Neela Purushaya Dhimahi 
Thanno Varunah Prachodayat”

“ஓம் ஜல பிம்பாய வித்மஹே
நீல புருஷாய தீமஹி
தன்னோ வருணப் பிரச்சோதயாத்”

வருண காயத்ரி மந்திர நன்மைகள்

தினமும் வீட்டில் வருண காயத்ரி மந்திரத்தை 108 முறை கூறி வரலாம் அல்லது ஒலிக்கச் செய்யலாம். இவ்வாறு செய்துவந்தால் வீட்டில் அமைதி நிலவும், குடும்ப ஒற்றுமை உண்டாகும், நல்ல தேக ஆரோக்கியம், எதிலும் வெற்றி கிடைக்கும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சொல்லலாம் அல்லது கேட்கலாம். தொடர்ந்து செல்வதால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்.

நீருக்கு நமது எண்ணங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. “தெளிந்த நீரோடை போல” என்று கூறுவது போல், வருண பகவானை வேண்டுபவர்களுக்கு மனம் தெளிவு பெறும். உறவுகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபடுகள் நீங்கும், நல்ல வேலை கிடைக்கும், மாணவர்கள் கருத்துடன் படிப்பர்.

SHOP ON AMAZON

வருணபகவான் யந்திரம் வாங்கி பூஜையறையில் வைத்து இந்த மந்திரத்தை சொல்லி வழிபட விரைவில் பலன் கிடைக்கும்.

நீர் சம்பந்தப்பட்ட அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் வருண காயத்ரி மந்திரத்தை மழை வரும்பொழுதெல்லாம் மூன்று முறை மனதிற்குள் சொல்லி வருண தேவனை வழிபட வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.