ருணம் என்றால் கடன். நரசிம்மருக்கு உகந்த இந்த ருணமோசனம் ஸ்தோத்ரம் மிகவும் சக்திவாய்ந்தது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எவ்வளவு பெரிய கடனும் விரைவில் தீர்ந்துவிடும். இந்த பாடல் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் நரசிம்மரின் பெருமையை கூறி கடனை தீர்க்கும்படி வேண்டுவதாக அமைக்கப் பட்டுள்ளது. நரசிம்மரை வேண்டி இந்த ஸ்தோத்ரம் தினமும் பாடி வருபவர்களுக்கு கடன் முற்றிலுமாக அடைந்து செல்வம் சேரும் என்று இந்தப்பாடலின் இறுதி வரியில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஸ்தோத்ரம் வெறும் பணம் சம்பந்தப்பட்ட கடனை மட்டுமல்லாமல் நமது கர்மா கடன்களையும் கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்கும். இந்த ஸ்தோத்ரத்தை தினமும் பக்தியுடன் பாடி நரசிம்மரின் அருளை பெற்றிடுங்கள்.