தேவதை எண்கள்(Angel Numbers) என்பது அடிக்கடி உங்கள் பார்வையில் படும் எண் வரிசைகள் ஆகும். இவை தற்செயல் நிகழ்வுகள் அல்ல, மாறாக உங்கள் தேவதைகள் அல்லது பிரபஞ்ச தூதர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ளவும், உங்கள் வாழ்க்கையில் வழிகாட்டவும், ஆதரவளிக்கவும் அனுப்பும் செய்திகளாகும்.
இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் அடக்கம். நமக்கு என்ன தேவையோ அதை பற்றி மட்டும் நாம் நினைக்கும் பொது, அதுவே நமக்கு அப்படியே கிடைக்கிறது. இவ்வாறு தேவைகளை அடைய நாம் பிரபஞ்ச ஆற்றலை நன்றாக புரிந்துகொண்டு, எப்பொழுதும் பிரபஞ்சத் தொடர்பில் இருக்க வேண்டும். ஆன்மீக எழுச்சி ஒருவருக்கு ஏற்பட பிரபஞ்சத்தால் அவர் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். அப்படி பிரபஞ்சத்தில் தேர்ந்தெடுக்கப்படும் நபரை இந்த பிரபஞ்சம் தேவதைகளை அனுப்பி தொடர்பு கொள்ளும். அப்படி அனுப்பப்படும் தேவதைகள் உங்களிடம் சில எண் வரிசைகள் மூலம் தொடர்புக்கு கொள்வார்கள்.
அதாவது ஒரே எண்ணை நீங்கள் எதேச்சையாக அடிக்கடி பார்ப்பீர்கள். முதலில் இதை நீங்கள் சரியாக கவனிக்க மாட்டீர்கள். ஒரே எண் அடிக்கடி தோன்றுவதை ஒரு கட்டத்தில் உணர்வீர்கள். பின்னர் அதற்கான காரணத்தை தேடும்போது தான் இந்த பிரபஞ்சம் பற்றியும் பிரபஞ்ச ரகசியம் பற்றியும் தெரிந்துகொள்வீர்கள். அந்த எண்ணிற்கான அர்த்தத்தை புரிந்துகொள்ள துடிப்பீர்கள். 1111, 222, 333, 1212, 444, 555, 777 போன்ற சில தேவதை எண்கள் பலருக்கு தோன்றுவதால் இந்த எண்கள் பொதுவான ஒரு தகவலாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு இது போன்ற பேன்சி எண்ணாக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட எண் அடிக்கடி தெரியும், உதாரணமாக 24, 456, 916, 545 இதுபோல தொடர் எண்களாக இல்லாத எண்கள் அடிக்கடி தென்படும்போது அது அந்த நபருக்கான பிரத்யேக தகவலாக இருக்கும். அந்த எண்ணை அடிக்கடி எழுதும் போதும், ராசியான எண்ணாக நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தும்போதும் வாழ்க்கை ஒரு புதுவித உத்வேகத்துடன் தெளிவுடன் வளமாக இருப்பதை உணர்வீர்கள்.
தேவதை எண்கள் பல வடிவங்களில் தோன்றலாம்:
- மணி நேரம்: 11:11, 2:22, 3:33 போன்ற ஒரே மாதிரியான எண்கள் கொண்ட நேரம்.
- தேதிகள்: 11/11, 12/12, 20/20 போன்ற எண்கள் கொண்ட தேதிகள்.
- பிற எண்கள், லைக், கமெண்ட் எண்ணிக்கை: 444, 777, 999 என்ற எண்ணிக்கைகள்
- பில் நம்பர், OTP நம்பர், PIN நம்பர்: 22555, 363636, 121212 போன்ற எண்கள்
- வண்டி நம்பர் பிளேட்: 9999, 7777, 1111, 8888 போன்ற எண்கள்
தேவதை எண்களின் பொருள்:
ஒவ்வொரு தேவதை எண்ணுக்கும் தனித்துவமான அர்த்தம் உள்ளது. பொதுவான சில அர்த்தங்கள்:
- 1: புதிய ஆரம்பங்கள், தன்னம்பிக்கை, புதிய வாய்ப்புகள், நேர்மறை எண்ணங்கள்.
- 2: சமநிலை, ஒத்துழைப்பு, உறவுகள்.
- 3: படைப்பாற்றல், வெளிப்பாடு, மகிழ்ச்சி.
- 4: அமைப்பு, பாதுகாப்பு, நிலைத்தன்மை, சாதகமான சூழ்நிலை.
- 5: மாற்றம், சாகசம், சுதந்திரம்.
- 6: அன்பு, கருணை, குடும்பம்.
- 7: ஞானம், ஆன்மீகம், உள்நோக்கம்.
- 8: செழிப்பு, வெற்றி, சாதனை.
- 9: முடிவுகள், முடிவுகள், விடுதலை.
SHOP NOW ON AMAZON
தேவதை எண்களை எவ்வாறு புரிந்துகொள்வது:
- கவனம் செலுத்துங்கள்: மீண்டும் மீண்டும் வரும் எண்களை கவனியுங்கள். ஒரு டயரியில் குறித்துக்கொள்ளுங்கள்.
- உணர்வு: அந்த எண்கள் உங்களுக்கு எப்படி உணர வைக்கின்றன? அந்த எண்ணை பார்க்கும் தருணம் நீங்கள் என்ன சாய்த்துக்கொண்டு இருந்தீர்கள் அல்லது எதைப்பற்றி சிந்தித்துக்கொண்டு இருந்தீர்கள் என்பதை யோசித்துப்பாருங்கள்.
- தொடர்பு: அந்த எண்கள் உங்கள் வாழ்க்கையின் எந்த பகுதியுடன் தொடர்புடையவை? அந்த எண்ணை கண்டவுடன் அன்றையபொழுது என்ன நடந்தது எவ்வித மாற்றங்கள் ஏற்பட்டது என்பதை குறிப்பெடுங்கள்.
- ஆராய்ச்சி: தேவதை எண்களின் பொருளைப் பற்றி மேலும் அறியவும். ஆன்மீக எழுச்சி அடைந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு மட்டுமே அடிக்கடி தெரியும் எண்கள் பிறருடன் ஒத்துபோகலாம், அதை பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கலாம்
- நம்பிக்கை: பிரபஞ்சம் உங்களுக்கு வழிகாட்டுகிறது என்பதை நம்புங்கள்.
தேவதை எண்களுடன் தொடர்பு கொள்ள சில வழிகள்:
- நன்றியுணர்வு: தேவதை எண்களுக்காக ப்ரபஞ்சத்திற்கு நன்றி தெரிவிக்கவும். எப்பொழுதும் நன்றியுணர்வுடன் இருக்கவும்.
- கேள்விகள்: தேவதை எண்களை பார்க்கும்பொழுதெல்லாம் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை பிரபஞ்சத்திடம் கேளுங்கள். உங்கள் வேண்டுதல்களை வைக்க வேண்டிய தருணம் அது.
- நம்பிக்கை: உங்கள் தேவதைகள் உங்களுக்கு பதிலளிப்பார்கள் என்பதை நம்புங்கள். பட்டம் பூச்சி, பறவைகள், பறவைகளின் இறகுகள் மூலம் அவர்கள் உங்கள் அருகில் இருப்பதை உங்களுக்கு உணர்த்துவார்கள்.
தேவதை எண்கள் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். அவற்றை கவனத்தில் கொள்ளுங்கள், அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள், உங்கள் தேவதூதர்களின் வழிகாட்டுதலுக்கு திறந்த மனதுடன் இருங்கள். உங்கள் வேண்டுதல்கள் நல்லவையாக இருக்கட்டும், உங்களுக்காக மட்டும் வேண்டுங்கள், ஏனெனில் உங்கள் வாழ்க்கையைத்தான் உங்களால் மாற்ற முடியும், பிறர் வாழ்க்கையை பிரபஞ்ச ஆற்றலைக்கொண்டு உங்களால் மாற்ற முடியாது.