பொதுவாக வாழ்க்கை என்பது பலபேருக்கு மேடு பள்ளம் நிறைந்ததாக தான் இருக்கும். அனைவருக்கும் வாழ்க்கை இனிப்பாக அமைவதில்லை, அப்படி அமைந்தாலும் அமையாவிட்டாலும் சிலர் எப்பொழுதும் மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். இதற்கு காரணம் அவர்கள் பிறந்த ராசி தான் என்றால் அதை நம்புவது சிலருக்கு கஷ்டமாக தான் இருக்கும். எதனால் இந்த குறிப்பிட்ட ராசியினர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று பார்ப்போம்.

மேஷ ராசி

காலச்சக்கரத்தின் முதல் ராசி மேஷ ராசியாகும். தீப்போன்ற ஆற்றல் மிக்க ஆளுமைக்கு பெயர்போனவர்கள் இந்த மேஷ ராசியினர். இந்த ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் என்றாலே பரபரப்பு, கோபம், யோசிக்காமல் செயல்படுவது போன்ற குணங்கள் இருக்கும். இவர்கள் எப்பொழுதும் எதையாவது செய்துகொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணமே இவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இவர்கள் வாழ்க்கையில் எதையும் நிதானமாக பொறுமையுடன் செய்தாலே இந்த நிலையிலிருந்து மீளலாம்.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்கள் அதிகம் நியாபக சக்தி உடையவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் உலக விஷயங்கள் அனைத்தும் தெரிந்து வைத்திருப்பார்கள். தனக்குதான் எல்லாம் தெரியும் என்று எண்ணுபவர்கள். மற்றவர்கள் செய்யும் தவறுகளை கண்டுபிடித்து திருத்த வேண்டும் என்று நினைப்பார்கள். இதனால் எப்பொழுதும் தான் சொல்வது தான் சரி என்று நிரூபிக்க பல ஆதாரங்களை தேடிக்கொண்டே இருப்பார்கள், இதுவே இவர்கள் எப்பொழுதும் மன அழுத்தத்துடன் இருக்க காரணமாகிறது. கன்னி ராசியினர் இந்த பழக்கத்தை விட்டுவிட்டு தான்உண்டு தன் வேலையுண்டு என இருந்தாலே போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். ருண, ரோக, சத்ரு ஸ்தானமான 6-ம் இடத்துக்கு அதிபதியும் செவ்வாய் என்பதால், இவர்களுடைய பேச்சே இவர்களுக்கு எதிரி. விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாவதால் திடீரென்று பிரச்னை வரும்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பார்கள். நண்பர்கள் என்றும் பாராமல் தேள் போல கொட்டிவிடுவார்கள். இதனால் பலரின் விரோதத்தை சம்பாதித்து மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இவர்கள் கோபத்தில் வார்த்தைகள் விடுவதை தவிர்க்கவேண்டும். எதையும் யோசித்து பிறர் மனம் புண்படாமல் பேசினால் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்கலாம்.

மகர ராசி

மகர ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் ஆழ்ந்த சிந்தனையுடனே இருப்பார்கள். இவர்கள் மனதில் புதுப்புது எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். சனியின் வீடு என்பதால் இவர்கள் எடுக்கும் முயற்சிகள் மந்தமாகத்தான் இருக்கும். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் தான் எடுத்த காரியத்தில் முன்னேற்றமும், வெற்றியும் பெறவேண்டும் என்று விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இவர்கள் அவசரப்படாமல் பொறுமையாக முயற்சி செய்தல் நன்மைதரும்.