ஜனவரி 2025, பிப்ரவரி 2025, மார்ச் 2025, ஏப்ரல் 2025, மே 2025, ஜூன் 2025 (January, February, March, April, May, June Maithra Muhurtham dates 2025)
எல்லாம் நன்மைக்கே! நல்லதே நடக்கும். நீங்கள் கடன் அடைக்க முடியாமல் அவஸ்தை படுபவர்களா? அப்படியெனில் இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும். விரைவாக கடனை அடைக்க நம் முன்னோர்கள் சொன்ன சூட்சமம் தான் இந்த மைத்ர முஹூர்த்தம். மாதம் இரண்டு அல்லது மூன்று முறை வரும் இந்த மைத்ரேய முகூர்த்தத்தில் உங்கள் கடனை முழுவதுமாகவோ அல்லது கடனில் ஒரு பகுதியையோ அல்லது உங்களால் முடிந்த ஒரு சிறு தொகையையோ செலுத்தினால் உங்கள் கடன் விரைவில் அடைபடும் என நம்பப்படுகிறது.
மைத்ரேய முகூர்த்தத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஜனவரி மாத மைத்ரேய முகூர்த்த தேதிகள்
தேதி | ஜனவரி மாத மைத்ரேய முகூர்த்த நேரம் |
---|---|
08.01.2025 | மதியம் 12.15 முதல் 02.05 வரை கிழமை: புதன்கிழமை | திதி: நவமி | கரணம்: கௌலவ கரணம் |
25.01.2025 | காலை 11.42 முதல் மதியம் 1.29 வரை கிழமை: சனிக்கிழமை | திதி: ஏகதாசி | கரணம்: பவ கரணம் |
பொதுவாகவே சனிக்கிழமைகளில் எக்காரணம் கொண்டும் கடன் வாங்கக்கூடாது, கடன் வாங்குவது மட்டுமல்ல, லோன் அப்ளை செய்க்காதும் கூடாது. அதே போல, நீங்க கடன் கேட்கும் நேரம், கடன் வாங்கும் நேரம் மற்றும் லோன் அப்ளை செய்யும் நேரம் குளிகை காலம் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. இந்த நேரங்களில் நாம் தொடங்கும் காரியங்களை மீண்டும் மீண்டும் செய்வோம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நேரத்தில் கடன் வாங்கினால் அடிக்கடி கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த காலங்களை தவிர்த்திடுங்கள்.