குபேரர் செல்வத்தின் அதிபதியாவார். குபேர பகவான் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து பொக்கிஷங்களையும் விநியோகிப்பதோடு மட்டுமல்லாமல், பராமரித்தும் பாதுகாக்கிறார். வேத சாஸ்திரங்களின்படி, செல்வம், செழிப்பு ஆகியவற்றின் பிரதிநிதியாகவும் கருதப்படுகிறார்.  எனவே நீங்கள் செல்வத்தைப் பெற குபேர எண் யந்திரத்தை உபயோகிப்பதன் மூலம் செல்வ வளத்தை பெறலாம்.

குபேர யந்திரத்தை வைத்து வழிபடுபவர்களுக்கு ஏராளமான செல்வம் சேரும் என்பது ஐதீகம். 

இந்த குபேர எண் யந்திரத்தின் விசேஷம் என்னவென்றால், இந்த எண்ணங்களின் கூட்டுத்தொகை ஒவ்வொரு வரிசையிலும் 72 என வரும். மேலிருந்து கீழாக அல்லது இடமிருந்து வலமாக அல்லது குறுக்காக கூடினாலும் அதே 72 தான் வரும். எனவே இந்த எண் யந்திரம் மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.

ஒரு வெள்ளை தாளில் மேல உள்ள படத்தில் உள்ளதுப்
போன்று பச்சை நிற மையால் கோடுகள் வரைந்துக் கொள்ளுங்கள். பின்னர் அதிலுள்ள எண்களை எழுதிக்கொண்டு அந்த காகிதத்தை பூஜை அறையில் வெத்து வழிபட்டு பின்னர் அதை உங்கள் பணப்பட்டியில் அல்லது பர்சில் வைத்துக்கொள்ளவும். வியாபாரம் செய்யும் இடத்தில கல்லா பெட்டியிலும் இதை வைத்துக்கொள்ளலாம்.

இதை மாதம் ஒரு முறை மாற்ற வேண்டும். இதை நம்பிக்கையுடன் செய்து பயன் பெற்றவர்கள் பலர். சிலர் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் தகடாகவும் செய்து வைத்து பயனடைந்துள்ளனர்.

குபேர யந்திரம் பணத்தையும் செழிப்பையும் ஈர்ப்பதுடன் மற்றும் புதிய வருமானத்திற்கான வழிகளை கொண்டு வரும். பணம், வெற்றி மற்றும் செழிப்பு ஆகியவற்றை ஈர்க்க உதவுகிறது. குபேரனையும் அவரது யந்திரத்தையும் வழிபடுவதால் துரதிர்ஷ்டம், எதிர்மறை ஆற்றல் ஆகியவையும் விலகும். 

SHOP NOW ON AMAZON